articles

img

ஆக்டோபஸ் குஞ்சு பொரிக்கும் அரிய ஆழ்கடல் பகுதி

    பசிஃபிக் பெருங்கடலில் 3 கிமீ ஆழத்தில் ஆக்டோ பஸ் குஞ்சு பொரிக்கும் இடம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட் டுள்ள மூன்றாவது குஞ்சு பொரிக்கும் இடமாகும். இந்த ஆக்டோபஸ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒரு புதிய வகையாகும். எதிரிகளிடமிருந்து தப்பிக்க ஆக்ட்டோபஸ்கள் கொண்டிருக்கும் இங்க் பை இந்த இனத்தில் காணப்படவிலை. பசிஃபிக் கடலினுள் இருக்கும் மலைகளை ஆய்வு செய்வதற்காக 18 சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சென்றபோது நூற்றுக் கணக்கான ஆக்டோபஸ்கள் அடைகாத்து குஞ்சு பொரிப்பதைக் கண்டனர். பொதுவாக ஆக்டோபஸ்கள் தனிமையில் ஆழ்கடலில் குளிர்வான பகுதிகளில் வாழ்பவை. 2013இல் இந்த இடத்தில் முட்டையிடுவதற் காக அவை கூடுவதை கண்டார்கள். ஆனால் குஞ்சு வளரும் நிகழ்வுகள் எதையும் காணவில்லை. அந்த இடத்தில் 54டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் தண்ணீரை வெளிவிடும் நீரூற்று உள்ளது. எனவே அந்த இடம் குஞ்சுகள் வளர்வதற்கு ஏதுவான இடம் இல்லை என்று கருதினார்கள். ஆனால் தற்போது தொலைதூரத்தி லிருந்து இயக்கும் ஆழ்கடல் கலன்களைக் கொண்டு புகைப்படம் எடுத்ததில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவருவதை காண முடிந்தது.